For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு சொத்தை அனுபவிப்பதில் அ.தி.மு.க-தி.மு.க. கூட்டு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தர்மபுரியில் அற நிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை உபயோகித்து வந்த அ.தி.மு.க வினருக்கு ஆதரவாக அமைச்சர் முல்லைவேந்தனும்அவரது ஆட்களும் செயல்பட்டது தான் முதல்வர் கருணாநிதியை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது எனத் தெரியவருகிறது.

இந்த அதிமுகவினருக்காக அற நிலையத்துறை அதிகாரி அன்புமணியை முல்லை வேந்தனின் ஆட்கள் ரவுடித்தனமாக தாக்கி, அவரை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது கருணாநிதியை எரிச்சல் அடையச் செய்துள்ளது.

முல்லைவேந்தனின் மிரட்டல் அரசியல், அடிதடி தாதா வேலைகள் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வந்துள்ளன. அப்போதெல்லாம் அதை அரசும்,முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேலையில் அமைச்சரின் இந்தச் செயல் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயரைஏற்படுத்தியுள்ளதால் திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல்லில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை இங்குள்ள அ.தி.மு.க.வினர்பயன்படுத்தி வந்தனர். குத்தகைக் கட்டணமாக அவர்கள் மிகக் குறைந்த அளவு பணத்தையே செலுத்தி வந்தனர்.

கோவில் நிலங்கள் ஏலம்:

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை அதிக தொகைக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தமிழ்க்குடிமகன் அறிவித்தார்.

இதையடுத்து ஒகனேக்கல் மக்கள், அங்குள்ள கோவில் நிலங்களை அதிக தொகைக்கு ஏலம் விட்டு புதிய குத்தகைக்கு விட வேண்டும் என்று மனுக்கொடுத்தனர்.

இதையடுத்து அந்த நிலங்களை அதிக தொகைக்கு ஏலம் விடுமாறு அமைச்சர் தமிழ்க்குடிமகன் உத்தரவிட்டார்.

அமைச்சரின் இந்த உத்தரவுக்குப் பிறகு அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி அந்த நிலங்களை ஏலத்தில் விடுவதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை பயன்படுத்தி வந்த அ.தி.மு.கவினர் அமைச்சர் முல்லைவேந்தனை அணுகி, அந்த நிலங்களைதங்களுக்கே குத்தகைக்கு நீட்டித்துத் தருமாறு கேட்டனர். இதற்காக அமைச்சருக்கும் தனியாக கவனிப்பு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

உடனே அமைச்சர், முல்லைவேந்தன் அறநிலையத்துறை ஆணையர் அன்புமணியைச் சந்தித்து நிலம் குத்தகைக்கு விடுவது தொடர்பாக விசாரித்தார். அப்போதுஅன்புமணி டெண்டர் மூலம்தான் ஏலம் விடப்படும் என்று கூறினார்.

இதையடுத்து அமைச்சரின் ஆட்கள், அன்புமணியை தாக்கினர்.

இத்தனைக்கும் அமைச்சர் முல்லைவேந்தனை அணுகி, தங்களுக்குக் குத்தகை நிலங்களை நீட்டித்துத் தரும்படிக் கேட்டவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வைச்சேர்ந்தவர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப அறநிலையத்துறை அதிகாரி அன்புமணியை வரவழைத்துப் பேசியிருக்கிறார் அமைச்சர்முல்லைவேந்தன். அன்புமணியை, அமைச்சர் முல்லைவேந்தனின் ஆட்கள் தாக்கியிருக்கிறார்கள்.

இது முதல்வர் கருணாநிதியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X