For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

தாய்மார்களே...பெரியோர்களே...அன்பார்ந்த உடன் பிறப்புகளே... எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் எனகோவையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இயல்பான சுற்றுச் சூழல் சற்று வெப்பம் அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில், அதோடு அ.தி.மு.கவினர் பிரச்சாரக்களத்தில் இப்போதே குதித்து விட்டனர். ஆட்சி மற்றம் வேண்டும் என்ற ஒரே நோக்கில், கோவை நகரில்தெருமுனைப் பிரச்சாரம் மாலையில் அ.தி.மு.க துவக்கியது. நான்கு நாள் பிரச்சாரமாக தெருமுனைக் கூட்டங்கள்நடக்கவுள்ளன.

மக்களை ஈர்க்க புதிய யுக்திகளையும் கையாளப் போகிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வேடிக்கைகாண்பித்து ஓட்டைக் கவர ஆயத்தமாகியுள்ளனர். மார்ச் 23 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை கோவை மாவட்டத்தின்அனைத்துப் பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை இந்தக் "கொண்டாட்டம் "உற்சாகத்துடன்துவங்குகிறது.

நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகள், தெருமுனைப் பிரச்சாரம் என அ.தி.மு.க வின் முதல் பிரச்சாரக் கூட்டம்ஒண்டிப்புதூர் பஸ் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி மண்டல அலுவலகம், என்.ஜி.ஆர் சிலை, வரதாரஜபுரம்,ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடக்கிறது.

தலைமைக் கழகப் பேச்சாளர்கள், திருப்புவனம் கோ.சி பாஸ்கரனின் தெம்மாங்குப் பாட்டு இசை நிகழ்ச்சி என ஒரேகலக்கல் பிரச்சாரத்தை 4 நாட்கள் மேற்கொள்கின்றனர் அ.தி.மு.கவினர்.

இந்த நான்கு நாளில் சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், தொண்டாத்தூர் என நகர்பகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் நடக்கிறது. கட்சியின் அனைத்துப் பிரிவும் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார் அ.தி.மு.க மாவட்டச் செயலர் செ.ம. வேலுச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X