For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் போட்டியிடுவாரா கருணாநிதி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய பொலிவோடு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

மே 10-ம் தேதி தமிழகத்தின் 12-வது சட்டசபையைத் தேர்ந்தெடுக்க பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கையில் குடங்களுடன் குடிநீர்க் குழாய்கள் முன்குழுமி நிற்கும் பெண்கள் போல, கண்ணைப் பறிக்கும் கலர் கலர் கொடிகளுடன் கும்பலாக நின்றுகொண்டிருக்கின்றன.

அணிகள் பல இருந்தாலும், திமுக, அதிமுக தலைமையிலான அணிகள் மக்கள் மத்தியில்பரபரப்பையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இரு அணிகளிலும் பல புதிய வரவுகள். கடந்த தேர்தலில் ஒரு அணியில் இருந்த கட்சி இப்போது மறு அணியில்என்ற அளவில் இரு அணிகளிலும் கட்சி மாற்றங்கள். அத்தோடு இந்தத் தேர்தலில் பல புதிய கட்சிகள்,புதியதலைவர்கள், புதிய முகங்கள்.

திமுக முகாமில் என்ன நடக்கிறது என்பதை நமது ஸ்கேனிங் கண்ணால் கொஞ்சம் பார்ப்போமா?

திமுக தரப்பு கொஞ்சம் அதிகப்படியான உற்சாகத்தில் இருக்கிறது. தெம்பு கூடிப் போய்க் காணப்படுகிறார், பலதேர்தல் கண்டவரான கலைஞர். மதிமுக, தமிழ்க்குடிமகன் என சில இழப்புகள் இருந்தாலும் கூட அது கலைஞரைப்பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக, போனால் போகட்டும் போடா என்ற கணக்கில் ஜமாய்ப்புடன்தான்இப்போதும் இருக்கிறார் கருணாநிதி.

திமுக, இந்தத் தேர்தலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஜாக்கிரதையாகவும், துணிவோடும் சந்திக்கப்போகிறது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், தங்களது ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நலப் பணிகள், திட்டங்கள்உள்ளிட்டவற்றை மக்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொல்லப் போகிறது திமுக.

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்தியாவின் பட்ஜெட் போல மிகவும் உன்னிப்பாகத் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.

தேர்தல் அறிக்கையைப் பார்ப்பவர்கள், வியந்து போய், திமுகவுக்கு வாக்களித்து விட்டுத்தான் மறு வேலை என்றஅளவுக்கு அது ஜோராக இருக்குமாம்.

தேர்தல் அறிக்கையே இந்த அளவுக்கு கவனமாக தயாரிக்கப்படும் போது, வேட்பாளர் தேர்வில் அக்கறைஇல்லாமல் போகுமா?. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிகளில் நல்ல பெயர் எடுத்தவர்கள், பெயர் எடுக்கமுயற்சி செய்தவர்கள், நல்ல பெயர் எடுக்கத் தவறியவர்கள் என மூன்று வகையான பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதில் 3-வதாக வருபவர்களுக்கு இம்முறை சீட் கிடையாது.முதல் இரண்டு பிரிவினருக்குமட்டுமே சீட்.

இருந்தாலும் கூட பாதிப் பேர் புதுமுகங்களாக, இளைஞர்களாக, பெண்களாக இருக்கும் வகையில், வேட்பாளர்தேர்வு அமையவுள்ளதாம். கருணாநிதி முன்னிலையில் நடந்த நேர்காணலின்போது, வந்தவர்கள் பெரும்பாலும்இளைஞர்கள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பின்னணிக் கதை உள்ளது. அதை பிறகுபார்ப்போம்.

இதைத் தவிர வேறு ஒரு மாற்றம் திமுக தரப்பில் கப் சிப்பாக உருவாகிக் கொண்டுள்ளது. மூத்த தலைகள் பலருக்குவாலன்டரி ரிடையர்மென்ட் கொடுக்கும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள். அதன்முதல் கட்டமாகவேஇதுவே தனக்குக் கடைசித் தேர்தல் என்று கலைஞர் அறிக்கை விட்டது என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.

தளபதி ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டும் விழாவாக இந்தத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் ஒரு திட்டம்இருக்கிறதாம்.

இதற்காக ஒரு திட்டம் தயார் என்கிறது திமுகவினல் ஒரு பிரிவு. அந்தத் திட்டத்தைக் கேட்டால் ஆச்சரியமாகஇருக்கும். அவர்கள் கூற்றுப்படி அந்தத் திட்டம் இப்படி இருக்குமாம்.

1. இந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிடுவது சந்தேகமே. அதற்குப் பதிலாக மு .க.ஸ்டாலினைமுன்னிலைப்படுத்தி, அவருக்குக் கீழ் கட்சி செயல்படும் விதத்தில் திட்டம் தீட்டப்படுகிறது.

2. அப்படியே போட்டியிட்டாலும் கூட, முதல்வர் பொறுப்பை அவர் ஏற்க மாட்டார். அதற்கு மாறாக, மூத்ததலைவர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும். சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் அதை ஏற்பார்.

3. தேர்தல் பிரசாரம் ஸ்டாலின் தலைமையில்தான் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யும்திட்டம் கருணாநிதியிடம் இல்லை. மாறாக, சில முக்கிய நகரங்களில் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொள்வார்.ஆனால் ஸ்டாலின், தமிழகம் முழுக்க, பட்டி தொட்டியெங்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்.

4. ஸ்டாலின் கீழ்தான் ஒவ்வொரு நடவடிக்கையும் இனிமேல் திமுகவில் இருக்கும். இதற்கு வசதியாக கட்சியின்அனைத்து மட்டத்திலும் இளைஞர் அணியினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

5. தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க புதிய அணி ஒன்றும் தயார். அமைச்சர்கள்பொன்முடி, துரைமுருகன், துணை சபாநாயகர் பரிதி.இளம்வழுதி, திருச்சி சிவா இவர்களோடு மக்கள் தமிழ் தேசம்கட்சியின் தலைவர் எஸ். கண்ணப்பன்தான் இந்த அணி.

6. சென்னையில் மட்டும் அரசியல் செய்து வரும் சைதை.கிட்டு தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார்.தேர்தலுக்குள் அவர் சரியாகி விட்டால், இந்த அணியில் அவரும் இடம் பெறுவார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின் முகம் மட்டுமே பளிச்சிடும்படியாக இந்தத் திட்டம்தீட்டப்பட்டுள்ளது. முன்பு போல நிதானமாக இல்லாமல், வெகு வேகமாக ஸ்டாலினை பொறுப்புக்குக் கொண்டுவர திமுகவில் திட்டங்கள் அதிவேகமாக தயாராகி வருகிறது.

ஸ்டாலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எதையும் தூக்கி எறிய திமுக தயாராக உள்ளது. அதற்கு முதல் பலிவைகோ என்கிறார்கள். புலி ஆதரவு வைகோவைப் பார்த்து பல திமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது போல இருக்கிறதாம்.

எதிர்காலத்தில், கருணாநிதியால் முன்பு போல சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாமல் போனாலோ அல்லது அவர்அரசியலிலிருந்து விலகிக் கொண்டாலோ, திமுகவை கைப்பற்றும் முயற்சியில் வைகோ இறங்க நேரிடலாம்என்பதே இந்தப் பயத்திற்குக் காரணம். அப்படி நடந்தால் ஸ்டாலின் கதி என்ன என்று யோசித்துப் பார்த்தேவைகோவுக்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு உலவுகிறது.

இந்தத் தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமானது. முக்கியமாக, மு.க.ஸ்டாலினுக்கு. ஒவ்வொரு அடியையும்பார்த்து எடுத்து வைக்கிறார்கள் திமுகவினர்.

திமுகவின் திட்டம் பலிக்குமா? மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜெயலலிதா அதற்கு செக் வைப்பாரா என்பதை மே10-ம் தேதி நடக்கப் போகும் தேர்தல் தீர்மானிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X