ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லும் இன்போசிஸ்
பெங்களூர்:
இந்தியாவின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் தனதுபார்வையை ஐரோப்பா பக்கம் திருப்பி வருகிறது.
இது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி அமெரிக்காவையேமையமாக வைத்து இருந்து வந்தது. இப்போது அங்கு சாஃப்ட்வேர் உள்படஅனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக இந்தியசாப்ட்வேருக்கான தேவை குறைந்து வருகிறது.
இதையடுத்து இன்ஃபோசிஸ் ஐரோப்பிய நாடுகள் பக்கம் தன் பார்வையைதிருப்பியுள்ளது.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையை இன்ஃபோசிஸ்புதன்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பவதாவது:
பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, ஐரோப்பா நாடுகள் எங்கள் நிறுவனத்தின் முக்கியவர்த்தக மையமாக உருவாகி வருகின்றன.
2001ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எங்களுக்குஇந்த பகுதியிலிருந்து வந்த வருவாய் 20.5 சதவிகிதமாகும். சென்ற ஆண்டில் இதேகாலகட்டத்தில் வருவாய் 15.7 சதவிகிதம்.
2000-2001ம் நிதிஆண்டில் வந்த மொத்த வரூவாயில் 18.8 சதவிகித வருவாய்ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவை. சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்துவந்த வருவாய் 14.8 சதவிகிதமாகும்.
2001ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அமெரிக்காவிலிருந்து 71.61சதவிகிதம் வருவாய் வந்துள்ளது. இது 2000ம் ஆண்டில் 77.50 பூஜ்யம் என்ற அளவில்இருந்தது. இந்த ஆண்டு வருவாய் குறைந்துள்ளது.
2001ம் ஆண்டில் ஜனவரி-மார்ச் மாதம் வரையிலான முதல் காலண்டில் ரூ 1.82பில்லியன் லாபம் ஈட்டியிருந்தோம். இது 94.5 சதவிகிதம் வளர்ச்சியாகும். ஆனால்110 முதல் 115 சதவிகிதம் வளர்சியை எதிர்பார்த்திருந்தோம்.
2000ம் ஆண்டில் நான்காவது காலாண்டில் 37 புதிய வாடிக்கையாளர்களைஇன்ஃபோசிஸ் சேர்த்துள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுடன்தொடர்பு கொண்டுள்ளோம். இவர்களில் பலர் பொருளாதார சிக்கல்களில்சிக்கியுள்ளனர்.
இந்த அறிக்கை இன்ஃபோசிஸ்சின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான நந்தன்நிலேகேனியால் வெளியிடப்பட்டது.
இன்ஃபோசிஸ்சின் மனித வள மேம்பாட்டுதுறை இயக்குனர் தினேஷ் கூறுகையில், 3மாதங்களில் மிக அதிகபட்சமாக 37 புது வாடிக்கையாளர்களை நாங்கள் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும். இந்த வாடிக்கையாளர்களில் பெல்ஜியத்தைச் சேர்ந்தமோன்சான்டோ, டெல்நெட் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.
இன்ஃபோசிஸ் பிரிட்டனில் இருக்கும் மொபைல் தொலைபேசி நிறுவனமானவோடாஃபோன் நெட்ஒர்க், தொலைபேசி பாகங்கள் தயாரிக்கும் சீன நிறுவனமானஹுவாவிய் விகார்ப் நிறுனத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2000-2001 நிதியாண்டின் நான்காவது காலாண்டில்9,831 பேர் பணிபுரிந்து வந்தனர். 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி 8,910பேர் பணி புரிந்து வந்தனர். 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி 5,389 பேர் தான்பணிபுரிந்து வந்தனர்.
இடைநிலை அதிகாரிகளை (மிடில் லெவல் மேனேஜர்ஸ்) நாங்கள் தொடர்ந்துசேர்த்துக் கொண்டு தான் இருப்போம். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காகஆட்களை தொடர்ந்து நியமிப்போம்.
எங்கள் நிறுவனத்தின் தேவைகளை நிறைவு செய்ய தேவைப்படும் போதெல்லாம்ஊழியர்களை புதிதாக சேர்த்துக் கொள்வோம் என்றார்.
இன்ஃபோசிஸ் மட்டுமல்லாமல், பல சாப்ட்வேர் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஐரோப்ப நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்திக்கொள்ள தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications