ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாஜ்பாய் வாழ்த்து
சென்னை:
தமிழக முதல்வராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாஜ்பாய்மலேசியாவிலிருந்து வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக்கைப்பற்றியது.
இதையடுத்து திங்கள்கிழமை மாலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டபின் பல்வேறு மாநில முதல்வர்களும், அமைச்சர்களும்ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் வர்த்தகம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றுள்ள பிரதமர்வாஜ்பாய், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!