இந்தியா: போர் விமானங்களை இயக்க பெண்கள் தேர்வு
பெங்களூர்:
போர் விமானங்களில் பெண் பைலட்டுகளை பணிக்கு அமர்த்துவது குறித்து இந்திய விமானத்துறை ஆலோசித்துவருவதாக பெங்களூரிலுள்ள விமான பயிற்சிமைய தலைமை அதிகாரி டி.ஜே. மாஸ்டர் கூறியுள்ளார்.
இது குறித்து பெங்களூர் விமானபயிற்சி மையத்திற்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,அமெரிக்கா போன்ற நாடுகளில் போர் விமானங்களில் பெண்கள் பைலட்களாக பணி புரிந்து வருகிறார்கள்.
அதை முன்னுதாரணமாக கொண்டு இந்தியாவிலும் போர் விமானங்களில் பெண்களை பைலட்டுகளாக நியமிப்பதுபற்றி பரிசீலித்து வருகிறோம்.
1993ம் ஆண்டு 500 பெண்களுக்கு பைலட் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 100 பெண் பைலட்டுகள் பயணிகள்விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் மட்டுமே பைலட்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
மற்றவர்கள் விமான கட்டுப்பாட்டு மையத்திலும், பள்ளிகளிலும், வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பலஇடங்ளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
பெண்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது அவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகவும்,அவர்கள் பணிகளை சிறப்பாகவும் செய்து வருகிறார்கள்.
இந்திய பாதுகாப்புத் துறையை பொறுத்த வரை விமானத்துறையில் அதிகமான அளவு பெண்கள் பணிபுரிகிறார்கள்.
விமானத்துறையில் பெண்களுக்கு சமபங்கு அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இது ஆண், பெண்பாகுபாட்டை விலக்கி இருவரும சமம் என்ற நிலையை உருவாக்கும் என்றார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!