தமிழக சுற்றுச்சூழல் நிபுணருக்கு அமெரிக்க விருது
சென்னை:
தமிழக சுற்றுச்சூழல் நிபுணர் ஒருவருக்கு அமெரிக்க விசைத்துறைப் பொறியாளர்கள் சங்கம் விருது வழங்கிகவுரவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த சேவையாற்றியமைக்காக, 59 வயதான எஸ். சுப்பிரமணியனுக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, விசை நிர்வாகத்துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 1996ல் இதேசங்கத்தின் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த 2 விருதுகளையும் பெறும் முதல் நபர் சுப்பிரமணியன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள அமெரிக்க-ஆசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பின் தென்னிந்திய இயக்குநராகத்தற்போது இருக்கிறார் சுப்பிரமணியன்.
இந்த அமைப்பில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக, அமெரிக்கத் தூதரின் கவுரவ விருதையும் இந்த ஆண்டுசுப்பிரமணியன் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள விசைத்துறைப் பொறியாளர் சங்கத்தில் 62 நாடுகளைச் சேர்ந்த 8ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!