புழுத்துப் போன அரிசி... 1.25 லட்சம் டன்னை தாண்டியது
சென்னை:
திமுக ஆட்சி காலத்தில் மொத்தம் 1,25,087 மெட்ரிக் டன் அளவுக்கு புழுத்துப் போன அரிசி வாங்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வினியோகிக்க முடியாத அளவுக்கு மிக மோசமான தரத்துடன் இந்த அரிசி உள்ளது என மாநிலஉணவுத்துறை அமைச்சர் தனபால் கூறினார்.
முன்னதாக 64, 339 மெட்ரிக் டன் அளவுக்குத் தான் புழுத்துப் போன அரிசி வாங்கப்பட்டதாக நினைத்தோம்.ஆனால், உணவுக் கழகத்தின் கிட்டங்களில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டபோது தான் மேலும் பல்லாயிரம்மெட்ரிக் டன் புழுத்துப் போன அரிசி வாங்கப்பட்டது தெரியவந்தது.
யாருமே வாங்கத் தயங்கும் தரக் குறைவான அரிசியை திமுக அரசு வாங்கிக் குவித்துள்ளது. இதற்காகலட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
திமுக ஆட்சியில் உணவுக் கழகம் மூலமாக ரூ. 125 கோடிக்கு இந்த அரிசி வாங்கப்பட்டது. இவ்வளவு தரம்குறைந்த அரிசியை எதற்காக திமுக அரசு வாங்கியது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
விரைவில் நடக்கவுள்ள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வோம்.
இந்த மோசடியில் தொடர்புடைய உணவுக் கழகத்தைச் சேர்ந்த 7 மேனேஜர்கள் மற்றும் துணை மேனேஜர்கள், 29பீல்ட் ஆபிசர்கள் ஆகியோர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் 33,370 டன் அரிசியை கேரளத்துக்கு ஏன் விற்றோம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களைக்கேட்கிறார். தரமில்லாத இந்த அரிசியை ரேசன் கடைகளில் வாங்க பொது மக்கள் தயாராக இல்லை. அதைஅப்படியே கிட்டங்கியில் போட்டு வைத்து அதன் தரம் மேலும் மேலும் கெடுவதைக் கண்டு கவலையடைந்தஉணவுக் கழகத்தில்ன் தலைவர் இது தொடர்பாக கேரள அரசுக்குக் கடிதம் எழுதினார்.
இந்த தரக் குறைவான அரிசியை வாங்கிக் கொள்ளத் தயார் என கேரள அரசு கூறியது. இதையடுத்துத் தான் இந்தஅரிசியை கேரளத்துக்கு தமிழக அரசு விற்றது. இதே போல பிற மாநிலத்துக்கு திமுக ஆட்சியிலும் அரிசிவிற்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தனபால் கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!