For Daily Alerts
சென்னை பெட்ரோல் பங்க்கில் ரூ 2.5 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை தாஷாப்பிரகாஷ் ஹோட்டல் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றுபுகுந்து, கேஷியரை மிரட்டி ரூ 5,000 ரொக்கப்பணம், ரூ 2.5 லட்சத்திற்கான வரைவுக் காசோலை மற்றும் கிரெடிட் கார்டுஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை இரவு ஆட்டோவில் வந்த கொள்ளைக் கும்பல்ஒன்று கேஷியரைக் கத்திமுனையில் மிரட்டி கையில் கிடைத்த பணத்துடன் தப்பித்துச் சென்று விட்டது.
நாங்கள் குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!