தமிழக அரசுக்கு தே.ஜ. கூட்டணி கண்டனம்
சென்னை:
அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அ.தி.மு.க. அரசுக்கு தேசிய ஜனநாயககூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இருக்கும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பன்,எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு. எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தொண்டர்காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்படும் என அறிந்து அவரை விடுதலை செய்து விட்டனர்.
ரூ 65 கோடி மதிப்புள்ள புழுத்த அரிசி இருப்பதாக அ.தி.மு.க அரசு கூறியுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாகநடைபெறும் சோதனைகளில் தாங்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.அவர்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.
மக்கள் நலப் பணியாளர்களை நீக்கம் செய்தது பழி வாங்கும் நடவடிக்கை தான். பணி நீக்கம் செய்யப்பட்டதால்இதுவரை 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் முறை மூலமாக ஆளுங்கட்சியினருக்குத்தான் பயன் கிடைக்கும். எனவேமதுக்கடைகளை ஏலம் விடும் முறையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!