தோழிக்காக தொடர்ந்து கண்ணீர் வடிக்கும் அங்கயற்கண்ணி
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இறந்து போன தனது தோழி (யானை)மீனாட்ச்சியின் பிரிவை தாளாமல் அங்கயற்கண்ணி யானை இன்னமும் அழுதுவருகிறது.
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி என்ற யானை பல காலமாகஇருந்து வந்தது. இந்த யானை கோவில் திருவிழாக்களிலும், கோவில் சம்பந்தப்பட்டஅனைத்து விழாக்களிலும் கம்பீரமாக முன்னே நடந்து செல்லும். இது கண்கொள்ளாகாட்சியாகும்.
இந்த யானை சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தது. கடந்த 17ம் தேதி இறந்துபோனது. மீனாட்சியின் தோழியான அங்கயற்கண்ணி என்ற இன்னொரு யானையால்தன் தோழியின் பிரிவை இன்னமும் மறக்க முடியவில்லை.
மீனாட்சி இறந்த தினத்தன்று அழத் தொடங்கிய அங்கயற்கண்ணியின் கண்களில்இன்னமும் கண்ணீர் வற்றவில்லை. அங்கயற்கண்ணியின் கண்களில் கண்ணீர் ஆறாய்பெருகிவருகிறது.
மீனாட்சியும், அங்கயற்கண்ணியும் ஒரே கொட்டகையில் வைக்கப்பட்டிருநத்தால்இரண்டும் உற்ற தோழிகளாக, நெருக்கமாக பழகிவிட்டன. தனது தோழியின் திடீர்பிரிவு அங்கயற்கண்ணியை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டது.
வழக்கமாக அங்கயற்கண்ணி பசிக்கும் போது சத்தம் போட்டு உணவு வாங்கிசாப்பிடும். ஆனால் மீனாட்சிஇறந்த பின் 3 நாட்கள் அங்கயற்கண்ணி எதுவுமேசாப்பிடவில்லை.
பின் யானைப்பாகர்களின் அன்பு தொல்லைக்கு சாப்பிட்டது.
யானை இறந்த இடத்தில் 16 நாட்கள் வரை விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்என்பது மரபு. அதன் படி யானை மீனாட்சி இருந்து, வாழ்ந்து. இறந்த இடத்தில்யானைப் பாகர்கள் விளக்கேற்றி வைத்து வருகிறார்கள்.
இந்த விளக்கை பார்த்தபடியே நாள் தோறும் கண்ணீர் வடித்து வருகிறதுஅங்கயற்கண்ணி. தொடர்ந்து 10வது நாளாக செவ்வாய்க்கிழமையும்அங்கயற்கண்ணியின் அழுகை தொடர்ந்து.
அங்கயற்கண்ணியின் சோகம் காண்பவரின் கண்களையும் கண்களையும் கலங்கவைக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!