ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளாைட இந்திய கிரிக்கெட் அணிக்குஆஸ்திரேலியா விடுத்திருந்த அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம்தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சனிக்கிழமை இந்தியக் கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியமும், இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு அட்டவணையைத் தயாரிக்கும் குழுவினரும் பங்கேற்றகூட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 முதல் 23ம் தேதிவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்பங்கேற்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணிக்கு விடுத்திருக்கும் அழைப்பு குறித்துவிவாதிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்தேசத்துடன் செப்டம்பர் மாதம் 20ம் தேதிமுதல் 24ம் தேதி வரை விளையாட உள்ளது. எனவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்கமுடியாத நிலையில் இருக்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இந்தியாவில் வந்து விளையாடும் போட்டிகள் குறித்தும் இக்கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டு விட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!