For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூலன்தேவி கொலை: தம்பதியிடம் தீவிர விசாரணை

By Super
Google Oneindia Tamil News

டெல்லி:

பூலன்தேவி கொல்லப்பட்டது தொடர்பாக ரூர்கி நகரைச் சேர்ந்த தம்பதி உள்பட பலரிடமும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

புதன்கிழமை பூலன்தேவி அசோகா ரோட்டில் உள்ள தனது வீட்டின் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

தம்பதியிடம் விசாரணை:

முன்னதாக காலையில் அவர் நாடாளுமன்றம் செல்லும் முன் ரூர்கியில் இருந்து காரில் வந்திருந்த விஜய் குமார்மற்றும் அவரது மனைவி உமா காஷ்யப் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர் நாடாளுமன்றம் புறப்பட்டுச் சென்றார்.

பிற்பகலில் வீட்டுக்கு பூலன்தேவி திரும்ப வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்தத் தம்பதி பூலனின்வீட்டில் தான் இருந்தது. பூலன் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் இந்தத் தம்பதி வந்த காரின் டிரைவர் பங்கஜ்என்பவர் காருடன் தலைமறைவாகிவிட்டார்.

இந்தக் காரில் தான் கொலையாளிகள் தப்பிச் சென்றனர். ஆனால், அந்தக் கார் தங்களது அல்ல என தம்பதிமறுப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து உண்மைையக் கண்டறிய ஒரு போலீஸ் குழு ரூர்கி விரைந்துள்ளது. பங்கஜ்தான் கொலையாளிகளை சம்பவ இடத்திலிருந்து காப்பாற்றி அழைத்துக் கொண்டு காரில் சென்றதாக போலீஸ்கருதுகிறது.

பங்கஜை கொலையாளிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி காரை ஓட்ட வைத்திருக்கலாம். இப்போது அவர்கொலையாளிகள் கையில் சிக்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அதேபோல பந்த் மார்க் என்ற இடத்தில் காரை நடுரோட்டில் விட்டுவிட்டு கொலையாளிகள் ஆட்டோவில் ஏறித்தப்பினர். அந்த ஆட்டோவின் நம்பரும் சிக்கிவிட்டது. டி.எல். 1 ஆர்-235 என்ற எண் கொண்ட ஆட்டோவில் தான்கொலையாளிகள் தப்பியுள்ளனர்.

ஆட்டோவின் அடையாளம் தெரிந்தது:

இந்த ஆட்டோ யமுனா புஷ்தா பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகோஷ் என்பவருக்குச் சொந்தமானது எனவும்தெரியவந்துள்ளது.

கொலையாளிகளைத் தேடி உத்தரபி பிரதேசம், மத்தியப் பிரதேசத்துக்கும் போலீஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பூலன்தேவிபலமுறை போலீசுக்கும் சி.பி.ஐக்கும் கோரிக்கை விடுத்து வந்தார் என பூலனின் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால், இதை போலீசார் மறுக்கின்றனர். அவர் கூடுதல் பாதுகாப்பு ஏதும் கோரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:

பூலனின் மரணத்தையடுத்து லோக்சபாவும், ராஜ்யசபாவும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பூலனின் உடல் சிறப்பு விமானம் மூலம் வாரணாசிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து டிரக் மூலம் அவரதுசொந்தத் தொகுதியான மிர்ஸாபூருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

முன்னதாக அவரது உடலை டெல்லியில் தான் எரிக்க வேண்டும் என பூலனின் தாயார் கோரினார். ஆனால்,முலாயம் சிங் யாதவின் வற்புறுத்தலின்பேரில் உடலை மிர்ஸாபூர் கொண்டு செல்ல ஒப்புக் கொண்டார்.

உ.பியில் பந்த்: போக்குவரத்து பாதிப்பு:

பூலன்தேவியின் மரணத்தையடுத்து உத்தரப் பிரசேத்தில் இன்று பந்த் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. முலாயமசிங்கின் சமாஜ்வாடி கட்சி அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்தினால் உ.பியில் சகஜ வாழ்க்கை சிறிதுபாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சாலை மறியல் போராட்டங்களும்நடந்து வருகின்றன.

இக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்துறை அமைச்சர் அத்வானி, உபி முதல்வர் ராஜ்நாத் சிங் ஆகியோரின்கொடும்பாவிகளையும் எரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X