For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டச்சு மொழியில் பகவத் கீதை

By Staff
Google Oneindia Tamil News

புரூசல்ஸ்:

இந்துக்களின் புனித புத்தகமான, பகவான் கிருஷ்ணன் அருளிய "பகவத் கீதை" டச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடந்தபோது, என்னை எதிர்த்து நிற்பவர்கள் என்உறவினர்கள். அவர்களைக் கொன்றுதான் நான் நாட்டை அடைய வேண்டுமா? என் உறவினர்களை கொல்லஎன்னால் முடியாது என்று கூறி அர்ஜுனன் வில்லை கீழே போட்டுவிட்டான்.

அப்போது அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக) இருந்து, கிருஷ்ண பகவான் அவனுக்கு கூறிய உபதேசம்தான் கீதா உபதேசம். அது அர்ஜுனனுக்கு மட்டும் கூறப்பட்ட உபதேசமல்ல. நாட்டு மக்கள், ஏன் உலக மக்கள்எல்லாருக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்தும் உபதேசம் கூட.

பகவான் கிருஷ்ணானால் உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை தற்போது டச்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலிருந்து டச்சுக்கு பகவத்கீதையை மொழி பெயர்த்திருக்கிறார் ஜெயா ஸ்டேஸ்என்பவர். இது குறித்து அவர் கூறுகையில்,

நான் பகவத் கீதையை வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருக்கிறேன். கீதையில் கூறப்பட்டுள்ளகருத்துக்களை முழுமையாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முயன்று என்னால் இயன்ற வரை முழுமையாககொடுத்திருக்கிறேன்.

15 வருடங்களுக்கு முன் நான் இந்தியாவிலும், தாய்லாந்திலும் கற்றுக்கொண்ட சமஸ்கிருத அறிவைக் கொண்டுநான் பகவத் கீதையை சமஸ்கிருதத்திலிருந்து டச்சு மொழியில் மொழி பெயர்த்திருக்கிறேன். பகவான் கிருஷ்ணர்நமது நண்பரை போன்றவர். அவர் நம் இதயத்தில் வாழ்ந்து வருகிறார் என்றார் ஸ்டேஸ்.

ஸ்டேசின் இந்த மொழி பெயர்ப்பை, ஐரோப்பாவின் பழமையான பல்கலைக் கழகமான கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் வினன்ட் காலிவெர்ட் என்பவர் கூர்ந்து ஆராய்ந்துள்ளார். அதன் பிறகே பகவத்கீதை மொழி பெயர்பு வெளியிடப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் பகவத்கீதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை குறித்துபகவதாகீதாநுவதா என்ற 400 பக்கங்கள் கொண்ட ஆய்வு புத்தகம் ஒன்றை காலிவெர்ட் வெளியிட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X