சென்னைவாசிகள் கடைப்பிடித்த கட்டாய மெளன அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமானதோடுபல்லாயிரக்கணக்கானோர் பலியான சம்பவத்துக்கு, சென்னையில் இன்று சாலைகளில் சென்றவர்கள் கட்டாயமெளன அஞ்சலிக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (செவ்வாய்கிழமை) நாடு முழுவதும்2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது முதல்வர் ஜெயலலிதா உட்படஅனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களில் இன்று காலை 10.30 மணியளவில்அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னையில் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களும் அஞ்சலி செலுத்தியது வேடிக்கையாக இருந்தது.

மவுண்ட் ரோடு போன்ற போக்குவரத்துமிகுந்த சாலைகளில், எங்கே சிகப்பு சிக்னல் விழுந்துவிடுமோ என்றஅச்சத்தில் பைக்குகளிலும், கார்களிலும் பறந்துகொண்டிருப்பவர்கள் அதிகம்.

இந்நிலையில் அஞ்சலி செலுத்துவதற்காக 10.30 மணியளவில் அனைத்து சிக்னல்களிலும் போலீசார் கையைக்காட்டிஅனைத்து வாகனங்களையும் கட்டாயப்படுத்தி நிறுத்திவிட்டனர்.

ஒன்றும் புரியாமல் விழித்த சிலருக்கு போலீசார் கைகளில் வைத்திருந்த "அமெரிக்காவில் பலியானோர்க்குஅஞ்சலி" என்ற போர்டை பார்த்த பிறகுதான் எதற்காக நிற்கவைக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

அப்படியும் சிலர் தங்களுக்குக் கிடைத்த "கேப்களில்" வண்டிகளை நகர்த்தி முதலில் செல்வதையே குறியாகநினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கார்களில் வந்த சிலர், வழக்கம்போல சிக்னல் என்று நினைத்து காரில்உட்கார்ந்தபடியே பேப்பர்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு ஒருவழியாக 2 நிமிடங்கள் கழிந்ததும் விட்டால்போதும் என்பதைப் போல, தப்பித்தோம் பிழைத்தோம்என்று வண்டிகளில் பறந்தார்கள்.

எப்படியோ மத்திய அரசின் உத்தரவுப்படி 2 நிமிடம் அனைவரையும் போலீசார் நிற்கவைத்துவிட்டனர். ஆனால்அவர்களை மவுனமாக்கவோ, அஞ்சலி செலுத்த வைக்கவோ போலீசாரால் முடியவில்லை.

ஏதோ ஒரு சிலராவது மெளனமாக இருந்தார்களே என்றுதான் நிம்மதி அடைந்து கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற