அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் அனுமதியைஅமெரிக்கா பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ளது. சீனா தவிரஅமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாகஉள்ளனர்.

இந்தக் கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை 5 நாடுகளில் ஒரு நாடு எதிர்த்தாலும் அந்தத் தீர்மானம்நிராகரிக்கப்படும். இதற்கு வீட்டோ அதிகாரம் என்று பெயர். ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காதீர்மானம் கொண்டு வந்து அதை சீனாவோ அல்லது வேறு நாடோ எதிர்த்தால் அத் தீர்மானம் செல்லாது. இதனால்,ஆப்கானைத் தாக்க ஐக்கிய நாடுகள் சபையின அனுமதி அமெரிக்காவுக்குக் கிடைக்காது.

இராக்கைத் தாக்கும் முன் இந்தக் கவுன்சிலின் அனுமதியை அமெரிக்கா பெற்றது. ஆனால், இப்போதுஅதற்கெல்லாம் அமெரிக்கா தயாராக இல்லை. நேரடியாக தாக்குதலில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷூ பாங்ஷாவ் கூறுகையில், அமெரிக்கா மீதுநடந்த தாக்குதலுக்கு பின் லேடன் தான் காரணமா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

உறுதியான சான்றுகளின் அடிப்படையில் தான் அமெரிக்காவின் தாக்குதல் இருக்க வேண்டும். இத் தாக்குதலில்அப்பாவிகள் கொல்லப்படக் கூடாது. ஐக்கிய நாடுகளின் அனுமதியைப் பெற்றுத் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக பாதுகாப்புக் கவுன்சிலின் உத்தரவை அமெரிக்கா பெற வேண்டும்.

தீவிரவாதிகளை சட்டப்படி தான் கண்டிக்க வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற