முஸ்லீம்-கிருஸ்துவர்கள் போர் மூளும்: அமெரிக்காவுக்கு சதாம் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உலக அளவில் முஸ்லீம்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும்இடையே போர் மூளும் என இராக் அதிபர் சதாம் ஹூசைன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து இராக்கையும் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் சதாம் ஹூசைன் ஒருதிறந்த கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்காவுக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில்,

சுவிட்சர்லாந்தில் 1897ம் ஆண்டு நடந்த சியோனிஸ மாநாட்டில் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுஎன யூதர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆனால், அவர்களால் அந்த நோக்கத்தை அடைய முடியவில்லை. இதனால் முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்கள்இடையே யூதர்கள் சண்டையை தூண்டி வருகிறார்கள்.

அமெரிக்காவின் வங்கிகள், வர்த்தகம், பத்திரிக்கைகள், டிவி ஆகியவை யூதர்களின் கையில் தான் உள்ளது. இதைகிருஸ்துவர்களால் தடுக்க முடியவில்லை.

ஆனால், தனக்குப் பணியாத அரேபிய, இஸ்லாமிய நாடுகளை அமெரிக்கா சட்ட விரோதமாக தாக்கி வருகிறதுஎன்று சதாம் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற