திமுகவுடன் கூட்டணி தொடருமா? - விடுதலை சிறுத்தைகள் இன்று முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது பற்றி தனது முடிவை இன்று மாலைக்குள்அறிவிப்பேன் என்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் அணியில் விடுதலைச்சிறுத்தைகள் இருக்காது என்று திருமாவளவன் முன்பிருந்துகூறிவருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்ணியில்சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் தற்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவைச்சேர்க்க திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்க்கப்பட்டதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தால், அன்பிறகு எங்கள் நிலை என்ன என்பதைப் பற்றி அறிவிப்போம்.

இதற்காக இப்போது எங்கள் அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டடத்தில்எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நான் இன்று மாலை அல்லது நாளை காலை திமுக தலைவர்கருணாநிதியைச் சந்திக்கவிருக்கிறேன்.

அவரைச் சந்தித்த பிறகு உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிலை குறித்து நான்அறிவிப்பேன்.

ஆனால் அதிமுகவுடன் சேரவேண்டும் என்ற இரட்டைச் சிந்தனை எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற