அமெரிக்காவில் நடந்த தாக்குதலை டிவியில் பார்த்தவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை டிவியில் பார்த்தவர் அங்கு வேலை பார்க்கும் தன் மகனும்இறந்திருப்பார் என்று நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

பெங்களூரில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர் கிருஷ்ணையா. இவரது மகன் ரகுநாத்அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணையா கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுஅமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி அவற்றைக்கொண்டு, அந்நாட்டின் வர்த்தகமையக்கட்டிடத்தின் மீது மோதும் காட்சியை டிவியில் பார்த்தார். உடனே அவருக்கு அங்கு வேலை செய்யும் தனதுமகன் ரகுநாத்தின் ஞாபகம்தான் வந்தது.

அந்தத் தாக்குதலில் தனது மகனும் இறந்திருப்பானோ என்று மனம் வருந்திய அவர், தான் வழக்கமாகச் சாப்பிடும்இருதய நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடாமல் தூங்கச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வீட்டிற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் லைன்கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மாமனார் வீட்டிற்கு போன் செய்து தான் அங்கு பாதுகாப்பாகஇருப்பதாகவும், நியூஜெர்சியில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவரது மாமனார், தனது மகளைத் தொடர்புகொண்டு, ரகுநாத் போன்செய்ததைப் பற்றித்தெரிவித்திருக்கிறார்.

பிறகு தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணையாவை அவரது மருமகள் எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால்முடியவில்லை. பிறகு காலையில் அவர் எழுந்தவுடன் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

ஆனால் விடிந்து வெகுநேரமாகியும் கிருஷ்ணையா விழிக்கவில்லை. அவர் படுக்கையிலேயே மகனைநினைத்துக்கொண்டு பரிதாபமாக மரணமடைந்திருக்கிறார்.

இதுகுறித்து அவரது மருமகள் கூறும்போது, எனது மாமனாருக்கு நியூயார்க்குக்கும் நியூஜெர்சிக்கும் வெகுதூரம்என்பது தெரியவில்லை. அவர் இரண்டும் அருகருகே இருக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டார் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற