தீவிரவாதிகளிடம் ரசாயன- உயிரியல் ஆயுதங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்கா மீது ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கர்கள்அஞ்சுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் ஆய்வு மையங்களின் அருகே பல மிருகங்கள் இறந்து கிடப்பதை அமெரிக்க உளவுசெயற்கைக் கோள்கள் படம் பிடித்துள்ளண. ஜலாலாபாத் பகுதியில் இந்த மிருகங்களின் உடல்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த மிருகங்கள் மீது ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

தலிபான் ராணுவத்திடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா நிச்சயமாக நம்புகிறது.

மூளையையும் நரம்புகளையும் பாதிக்கும் பல ரசாயன ஆயுதங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவால்கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற