தந்தை பாதையில் கட்சியை நடத்திச் செல்வேன்: ஜி.கே.வாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த த.மா.க.தலைவரும், என் தந்தையுமான ஐயா மூப்பனார் பாதையில் கட்சியை நடத்திச் செல்வேன் என்றுதமிழ் மாநில காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரசின் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் மரணமடைந்ததையடுத்து அவரது மகன் ஜி.கே.வாசன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதன்கிழமை காலை த.மா.காவின் தலைமையகமான சத்திய மூர்த்திபவனுக்கு ஜி.கே.வாசன் வந்த போதுமேளதாளத்துடன் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்து. பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின்ஜி.கே.வாசன் முறைப்படி த.மா.கா. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதசார்பின்மை கொள்கையை கடைபிடித்து வந்த மறைந்த தலைவர் மூப்பனாரின் பாதையில் நான் கட்சியைநடத்திச்செல்வேன். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என்பது என்விருப்பம்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மதணா சார்புள்ள கட்சிகள், ஜாதிக் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.அவர்களை தோல்வி அடையச் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காத த.மா.காவினர் மனவருத்தம் அடையக்கூடாது. அவர்களுக்கு கட்சிபிற்காலத்தில் 10 மடங்காக திருப்பி செய்யும்.

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் முடிவை த.மா.கா. ஆதரிக்கும். காவிரி நதி நீர் விஷயத்தில் தமிழகஅரசு எடுக்கும் முடிவுக்கு த.மா.கா. முழு ஆதரவு தரும் என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற