தலிபான்களுக்கு நாங்கள் ஆயுதம் தரவில்லை: பாக். மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்:

தலிபான்களுக்கு நாங்கள் பணமோ, ஆயுதங்களோ தரவில்லை என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மறுத்துள்ளது.

துபாயில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கும் தலிபான்களுக்கும் அதிக தொடர்பு இல்லை.அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் எல்லாமே சோவியத் யூனியன் ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுவிட்டுப்போன ஆயுதங்கள் தான்.

இந்த ஆயுதங்களைக் கொண்டு 10 வருடங்கள் கூட அவர்களால் போர் நடத்த முடியும். அவ்வளவு ஆயுதங்களைசோவியத் ராணுவம் விட்டுச் சென்றுள்ளது.

தலிபான்களை நீங்களே நேரடியாக கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமெரிக்காவிடம் நாங்கள் பல முறைஎடுத்துச் சொன்னோம்.

பல நாடுகள் நினைப்பது மாதிரி தலிபான்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏதும் இல்லை. பலவிஷயங்களில் எங்கள் இருவருக்கும் ஒத்துப் போனதே இல்லை.

பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும் ராணுவப் பயிற்சி தராதீர்கள் என்று கூறினோம். ஆனால், அவர்கள்கேட்கவில்லை. நாங்கள் அவர்களுக்கு பணம், பெட்ரோல், கோதுமை, ஆயுதங்கள் கொடுத்ததாக பல நாடுகளும்நினைக்கின்றன. இது தவறு.

அவர்களுக்கு ஈரான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து தான் பெட்ரோல் வருகிறது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற