நான் தற்காலிக முதல்வர்தான்- பன்னீர்செல்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை

நான் தறகாலிக முதல்வர்தான் என்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள பன்னீர்செல்வம் கூறினார்.

ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்றுஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானது. பிறகு உடனடியாக அதிமுகஎம்.எல்.ஏக்கள் கூடி பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு, அவர் முதல்வராகபதவியேற்றுக்கொண்டார்.

இன்று (சனிக்கிழமை) முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். இது தற்காலிகமானது தான்.மீண்டும் எங்கள் தலைவிமுதல்வராகப் பொறுப்பேற்பார்.

எங்கள் கட்சித் தலைவி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே தீட்டப்பட்ட திட்டங்கள் பொதுமக்களைச்சென்றடையும்படி அரசு எந்திரத்தைப் செயல்படுத்துவோம்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படுவேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற