முதல்வராக ஜெயலலிதாவின் பிறப்பித்த கடைசி ஆணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் பதவியிலிருந்து விலகும் முன் ஜெயலலிதா போட்ட கடைசி உத்தரவு குறித்துத்தெரிய வந்துள்ளது.

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு மகளிர் காவல் நிலையங்களைஅதிகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

அவர் முதல் முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்தபோது தமிழகம் முழுவதிலும்மகளிர் காவல் நிலையங்களைத் திறந்தார்.

அது தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில் மீண்டும் முதல்வரான பிறகு மகளிர் காவல் நிலையங்களைசீரமைக்கவும், புதிதாக பல காவல் நிலையங்களைத் திறக்கவும் ஜெயலலிதா முடிவுசெய்தார்.

அதன்படி, 126 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் திறக்க, காவல்துறைஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு 50 காவல் நிலையங்களும், அடுத்த ஆண்டு 40நிலையங்களும், மூன்றாவது ஆண்டில் 36 காவல் நிலையங்களையும் திறக்கதிட்டமிடப்பட்டது.

இதற்கு ஆண்டுக்கு ரூ. 16.2 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

இதுதவிர மகளிர் காவல் நிலையம் இல்லாத பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்காவல் நிலையங்களை அணுகி தங்களது பிரச்சினைகளைக் கூறுவதற்கு வசதியாகதமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டரைநியமிக்கவும் ஜெயலலிதா முடிவு செய்தார்.

இதன்படி மொத்தமுள்ள 1217 காவல் நிலையங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகாலத்திற்குள் தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு பெண் காவலர்களை நியமிக்கஅரசு முடிவு செய்திருந்தது.

இதுதொடர்பான ஆணைகளை கடைசியாக ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

காவல்துறையினரின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜெயலலிதா, அவர்கள்தொடர்பான உத்தரவையே கடைசியாக பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற