உள்ளாட்சித் தேர்தல்: சின்னம் தொடர்பாக ப.சிதம்பரம் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் ஒதுக்கும்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனக் கோரி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவரவர் கட்சி சின்னம்ஒதுக்கப்படும். பஞ்சாயத்து, பேரூராட்சி போன்ற அமைப்புகளுக்குப் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்குக் கூடஅவர்களது சின்னம் ஒதுக்கப்படாது. வேறு சின்னங்கள் தான் ஒதுக்கப்படும்.

பேரூராட்சி போன்ற அமைப்புகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும்போது சுயேட்சை வேட்பாளர்களைவிட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என சிதம்பரம் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

எனது இந்தக் கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்து உத்தரவிட்டுவிட்டது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது,ஒருதலைப்பட்சமானது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.

எனது கட்சி கடந்த 20ம் தேதி முதல் மத்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகிவிட்டது.

1968ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம்ஒதுக்குவதில் முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாங்கள் வரும் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் போட்டியிட உள்ளோம். நாங்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் ஒரேசின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம். இது தொடர்பாக மாநில சேர்த்ல கமிஷனுக்கு கடந்த 17ம் தேதியும் 21ம் தேதியும் ஒருகடிதம் எழுதினேன்.

அதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முதலில் சின்னத்தை ஒதுக்கிவிட்டுத் தான் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்க வேண்டும்என ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஆனால், 19ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், எந்தக் கட்சியையும் அங்கீகரிக்கும் அதிகாரம்தங்களுக்கு இல்லை என்றும், இதனால் சின்னம் ஒதுக்குவதில் யாருக்கும் முன்னுரிமை தர முடியாத நிலையில் இருப்பதாக அதில்கூறப்பட்டிருந்தது.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை (புதன்கிழமை) நீதிபதி தினகரன் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற