அரசு அலுவலகங்களில் ஜெ. படம் அகற்றல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டன.

அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் முதலமைச்சரின் புகைப்படங்கள் வைக்கப்படுவதுவழக்கம்.

அதன்படி ஜெயலலிதாவின் படங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுஅலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்தன.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானது. தற்போது அவருக்குப்பதிலாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்களின்அறைகளில் இருந்து அகற்றப்பட்டன.

ஆனால் பன்னீர் செல்வத்தின் படத்தை வைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற