உள்ளாட்சித் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் 28ம் தேதி வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் வரும் 28ம் தேதிவெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிடுகிறது. சேலத்தில் பாட்டாளி மக்கள்கட்சியும், கோவையில் பாரதிய ஜனதா கட்சியும் மேயர் பதவிகளுக்குப் போட்டியிடும் என்று திமுக தலைவர்கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது, அவர் கூறியதாவது,

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நான்தான் காரணம்என்று அதிமுகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். இப்போது ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாதுஎன்றுசுப்ரீம் கோர்ட் கூறிய தீர்ப்புக்கும் நான்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

இதற்காக எனது மற்றும பிரதமர் வாஜ்பாயின் கொடும்பாவிகளையும் அதிமுகவினர் எரித்துவருகிறார்கள்.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி மற்றும் நரசிம்மராவ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று கோர்ட் தீர்ப்பளித்தது. அதற்கு அவர்கள் தலைவணங்கினார்கள், மற்றவர்கள் மீது பொய்க்குற்றம்சாட்டவில்லை.

அதிமுகவினரின் இந்த நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிப்பது போன்றதாகும். மேலும் இதற்கு திமுகசார்பில் எதிர்ப்புப் போராட்டங்கள் எதுவும் நடத்தும் திட்டமில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க மற்றும பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு வருகிறது.சேலம் மேயர் பதவிக்கு பா.ம.கவும், கோவை மேயர் பதவிக்கு பா.ஜ.கவும் போட்டியிடுகின்றன.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக போட்டியிடுகிறது.

மேலும் சென்னையில் திமுக சார்பில் ஸ்டாலின் மட்டுமல்லாது யாரை நிறுத்தினாலும், திமுக வேட்பாளர்தான்வெற்றிபெறுவார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வரும் 28ம் தேதிவெளியிடப்படும். அதற்கான வேட்பாளர் தேர்வுகுறித்து மாவட்டக் கழக நிர்வாகிகளுடன், தலைமைக்கழகநிர்வாகிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை என்னைச் சந்திக்கிறார். பா.ம.க.எங்கள் கூட்டணியில் இணைந்தாலும், அவரும் எங்கள் கூட்டணியில் தொடர்வார் என்று நான் நம்புகிறேன்.

புதிய தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்போது அது பழைய தமிழகம் ஆகிவிட்டது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற