ஒரு வழியாக கருணாநிதி, ராமதாஸ் சந்தித்தனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நீண்ட நாட்களாக தள்ளிப் போடப்பட்ட கருணாநிதி-ராமதாஸ் சந்திப்பு, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்பாடுஏற்படுத்துவதை முன்னிட்டு, ஒரு வழியாக நடந்தது.

திமுகவுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் முடிவில், சேலம் மேயர் பதவிக்கு பா.ம.க. போட்டியிடும் என்றுஅக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளது. இதையடுத்து கடந்த ஒருவாரமாக திமுக முன்னணித் தலைவர்களுக்கும், பா.ம.க. தலைவர்களுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைநடந்துவருகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்ததார். பா.ம.க தேசியஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த பின்பு 2 தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. பிறகு 1998ல் இருந்து அதிமுக, திமுக என்றுமாறிமாறி கூட்டணி அமைத்து வருகிறது. இதுவரை தொடர்ந்து 2 தேர்தல்களில் அக்கட்சி ஒரே கூட்டணியிலோ அல்லது தனித்தோபோட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க. பிரிந்தவுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இணைந்தது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையமாட்டோம் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இப்போது தேர்தல் நெருங்கியவுடன் பா.ம.க.அந்த நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றத்தையடுத்து திமுக தலைவர்கருணாநிதியை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். சந்திப்பின் முடிவில் உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு குறித்த அறிக்கை ஒள்றைராமதாஸ் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பபதாவது,

திமுக கூட்டணியுடன் எங்கள் கட்சிக்கான கூட்டணி முடிவாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடுக்கான பேச்சுவார்த்தைதொடர்ந்து நடந்து வருகிறது.

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. போட்டியிடுகிறது. மற்ற விவரங்களை திமுக தலைவரும், கூட்டணித் தலைவருமானகருணாநிதி அறிவிப்பார் என்றார் ராமதாஸ்.

மேலும் பாரதிய ஜனதாக் கட்சி கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எஞ்சிய சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் திமுக போட்யிடுகிறது. மேலும் தமிழகத்தில்உள்ள பேரூராட்சிகளுக்கு போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற