கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர்கோயம்புத்தூரிலும், திருப்பூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானதிலிருந்து அதிமுகவினர் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் அந்த ஆர்ப்பாட்டங்களின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள்மாறன் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படுகிறது. அந்தத் தலைவர்களின்உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.

கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பால்வளத்துறை அமைச்சர் சண்முகவேலு மற்றும் வீட்டுவசதித்துறைஅமைச்சர் வேலுசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிறகு அனைவரும் கலெக்டர் அலுவலகம் அருகில் வரை ஊர்வலமாகச் சென்றனர். அங்கு, அதிமுக தலைவர்கள்தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். இதில் 2000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள்கலந்துகொண்டனர்.

இதேபோல திருப்பூரிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குதிருப்பூர் எம்.எல்.ஏ. சிவசாமி தலைமை தாங்கினார். இதில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள்கலந்துகொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற