காங். தலைமையில் அமைகிறது மெகா கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ளாட்சித் தேர்தலில் புதிய அணி அமையவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுகவுடன்கூட்டணி சரி வராததால் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதேபோல, திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ்ஜனநாயக பேரவையும் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது.

தற்போது தனித்துப் போட்டியிடுவதற்குப் பதில் கூட்டணியாக நிற்க காங்கிரஸ்கட்சியும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அதில் உடன்பாடுஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரவுள்ளன, முன்னாள் அமைச்சர்கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்,ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவையே அவை.

ஆறு மேயர் பதவிகளில் காங்கிரஸ் கட்சி மூன்று மேயர் பதவிக்குப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ்போட்டியிடலாம்.

ப.சிதம்பரத்தின் கட்சிக்கு திருச்சி, சேலம் ஆகியவை ஒதுக்கப்படலாம். மீதமுள்ளநெல்லை மேயர் தேர்தலில் புதிய தமிழகம் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

மக்கள் தமிழ் தேசம் மற்றும் புதிய நீதிக் கட்சிக்கு நகராட்சி மற்றும் பிற இடங்களில்போட்டியிட இடம் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், ப.சிதம்பரம், கண்ணப்பன்,ஏ.சி.சண்முகம் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அமெரிக்காவில் இருப்பதால் அவரதுபிரதிநிதி ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவுடன் அதிருப்தியில்இருப்பதாகத் தெரிகிறது. அவர்களையும் தங்களது கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ்தரப்பு முயற்சி செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரஸ் இல்லாத நிலையில் தங்களுக்கு அதிகஇடங்கள் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கோரியுள்ளனர். மேலும், மதுரை மேயர்தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு தருமாறும் கோரியுள்ளனர்.

ஆனால் அது இயலாத காரியம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.இதனால் அவர்கள் அணியிலிருந்து வெளியேறும் யோசனையில் இருப்பதாகக்கூறப்படுகிறது.

இந்த அணி வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால், அரசியலை விட நிறுத்தும்வேட்பாளர்கள்தான் முக்கியம் என்பதால் திமுக, அதிமுகவுக்கு இதனால் பெரியஅளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற