தேர்தல் களத்தில் விஜயகாந்த் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் போட்டியிடுகிறது.

விஜயகாந்த் சமீபத்தில் தனது மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறியிருந்தார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் ரவிக்குமார் திண்டுக்கல் நகராட்சித் தலைவர் பதவிக்குபோட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
"எங்களது மன்றம் அடுத்தபடியாக சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடும். அதற்கு முன்னோட்டமாகவே, எங்களது மன்றத்தினர்உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

எங்களது தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைப்படியே தேர்தல் களத்தில் புகுந்துள்ளோம்" என்றார் ரவிக்குமார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற