நிலத்தடி நீர் குறைவு காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான் காரணம் என்று சொல்லப்படுவதற்குஆதாரம் இல்லை என்று வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் பட்நாயக் கூறினார்.

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்திற்கு காரணம் சென்னையில் நிலத்தடிநீர் குறைவாக இருப்பதுதான் என்றும், மழையளவுகுறைந்ததுதான் என்றும் மக்கள்மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தென்னிந்திய வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் பட்நாயக் கூறுகையில்,

நிலத்தடி நீர் குறைந்ததாலும், மழையளவு குறைந்ததாலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சொல்லப்படுவதற்குஆதாரம் இல்லை.

இந்த காரணங்களால் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படவாய்ப்பு இல்லை என்றார் பட்நாகர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற