கொடும்பாவி எரிப்பில் காயமடைந்த அதிமுக பெண் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பின்போது தீயில் கருகிய அதிமுக பெண் தொண்டர் சிகிச்சை பலனளிக்காமல்இறந்தார்.

தாம்பரம் பகுதியில் பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்து அதிமுகவினர் 4 நாட்களுக்கு முன்பு கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல் ஊற்றி தீயைப் பற்ற வைத்தபோது, சில பெண் தொண்டர்கள் மீது தீபரவியது. 10க்கும் மேற்பட்ட பெண்கள்தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ராஜேஸ்வரி என்ற பெண் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இன்னும் 7 பெண்கள் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற