சின்ன சேலத்தில் 3 போலி டாக்டர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

சின்னசேலத்தில் 3 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் குறித்த அதிரடி சோதனை நடத்த அம்மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுஅபய்குமார் சிங் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் சோதனை நடத்தியதில், சின்னசேலம் கடைவீதியில் கிளினிக் வைத்திருந்த அறிவழகன்ஆர்.ஐ.எம்.பி. படித்ததற்கான போர்டை தொங்கவிட்டிருந்தார்.

ஆனால் அவர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் அவரிடம் ஆர்.ஐ.எம்.பி. படித்ததற்கானசான்றிதழும் இல்லை. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சின்னசேலம் மூங்கில்பாடி ரோட்டில் கிளினிக் வைத்திருந்த சாம் ஞானதாஸ், மற்றும் சுப்பிரமணியம்ஆகியோரும் எச்.ஐ.எம்.பி. படித்ததற்கான போர்டை தொங்கவிட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்துள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த 3 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற