திமுக எங்களை அழைக்கவில்லை - கிருஷ்ணசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிருஷ்ணசாமி அங்கிருந்து வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற நானும், எங்கள் கட்சித்தொண்டர்களும் அயராது பாடுபட்டோம். எங்கள் வாக்கு வங்கிகளில் இருந்து வாக்குகளை அள்ளி அள்ளித்தந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பான வேட்பாளர்களைவிட சமூகங்கள் சார்பான வேட்பாளர்களுக்குத் தான்முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள எங்கள் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசஅழைப்பு வரவேயில்லை என்றார்.

இதன் மூலம் புதிய தமிழகம் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடாது என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற