மீண்டும் காங்கிரசில் குமரி அனந்தன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாய் கட்சியை பலப்படுத்த, சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று மீண்டும் காங்கிரசில் இணைவதாக குமரிஅனந்தன் அறிவித்துள்ளார்.

குமரி அனந்தன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் காங்கிரசிலிருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வந்தார். பிறகுசட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

அந்தக் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து, குமரி அனந்தன் மட்டும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் பிரிந்து சென்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்று சமீபத்தில்சென்னை வந்திருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா அழைப்பு விடுத்தார். இதுகுறித்து அவர்குமரி அனந்தனை அழைத்துப் பேசினாராம்.

இதையடுத்து தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரசில் இணைவது என்றுமுடிவெடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அக்கட்சியினர் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

தாய் கட்சியின் அழைப்பு கட்சியை தமிழ்நாட்டில் பலப்படுத்தும் நோக்கத்தில் உள்ளது. மேலும் காங்கிரஸ்தலைமையில் தனி அணி அமைவதின் அவசியத்தை அது உணர்த்துகிறது.

மேலும் தாய் சோனியாவின் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைவது என்று முடிவு செய்துள்ளோம் என்று அந்தத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற