டெல்லியில் எரிபொருள் நிரப்பியது அமெரிக்க போர் விமானமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அமெரிக்க போர் விமானத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லி விமானநிலையத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய குற்றவாளியாககருதப்படும் ஒசாமா பின் லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசுஅடைக்கலம் கொடுத்துள்ளது.

அவரை ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை ஏற்கதலிபான் அரசு மறுத்து விட்டது. இதையடுத்த ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுக்கஅமெரிக்கா முடிவெடுத்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடந்தும்போருக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின் சரக்கு விமானமான ஹெர்குவிஸ் சி- 130 சிங்கப்பூரிலிருந்து டெல்லி பாலம் விமான நிலையத்தில்தரையிறங்கியது.

அங்கு அந்த விமானத்திற்கு பெட்ரோல் நிரப்பப்பட்டது. அதன் பின் அந்த விமானம்புறப்பட்டுச் சென்றது.


அந்த விமானம் எங்கு செல்கிறது? அதில் என்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்துஅதிகாரபூர்வமாக எந்த விதமான தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அந்தவிமானம் அமெரிக்காவிலிருந்து வத்ததகாவும், அது தஜிகிஸ்தானுக்குசெல்வததாகவும் கூறப்பட்டது.

ஆப்கான் மீது அமெரிக்கா தொடுக்கும் போருக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியா,தேவைப்பட்டால் அமெரிக்க போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவுதுஉள்ளிட்ட உதவிகளை செய்ய தயாராக உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற