மேயர் பதவி: வேட்பு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சிதேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதற்கான வேட்புமனு கடந்த திங்கள்கழமைதொடங்கியது. வரும் திங்கள்கிழமை தான் மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

பல அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிபங்கீடும் முடிவாகிவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மேயர் பதவி, நகராட்சிதலைவர் பதவி, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது.

சென்னை மாநகர மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த பின் அவர் தொண்டர்கள் புடை சூழ மாநகராட்சிஅலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்ஜெயலிலதாவின் படம் மாட்டப்பட்டிருந்ததை கண்ட திமுக தொண்டர்கள் அதற்குஎதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின்கூறுகையில், கட்சி தலைமை நான் மேயர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றுகட்டளையிட்டது.

அந்த கட்டளையை ஏற்றே நான் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறேன். கடந்த 5ஆண்டுகாலம் நான் மேயர் பதவியில் இருந்த போது செய்த சாதனைகளை கூறி ஓட்டுகேட்பேன். நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற