மீண்டும் மேயரானால்... ஸ்டாலின் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மீண்டும் மேயரானால் அதிமுக அரசு எந்த இடைஞ்சலைக் கொடுத்தாலும் அதை சந்திக்கத் தயார் என்று ஸ்டாலின்கூறினார்.

இளைஞர் அணியை பலப்படுத்தும் பணி இருப்பதால் நான் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சென்னை மேயரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான ஸ்டாலின் முன்பு அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் சென்னை மேயருக்கான வேட்பாளராகமீண்டும் ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

திமுக இளைஞரணியைப் பலப்படுத்தும் பணியிருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டன் என்றுமுன்பு கூறினேன்.

கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று மீண்டும் போட்டியிட்டு, சென்னை மக்களுக்கு எனது பணியினைத்தொடர முடிவுசெய்துள்ளேன்.மேலும் சிங்காரச் சென்னை என்ற லட்சியக் கனவை நனவாக்கவும் நான்விரும்புகிறேன்.

இப்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சிப்பணி பாதிக்காது. சுற்றுப்பயணங்களைமேற்கொண்டு இளைஞரணியை வலுப்படுத்தவும் பாடுபடுவேன்.

மேலும் பெரும்பான்மையான இடங்களில் திமுக கவுன்சிலர்களும் வெற்றிபெற்று, நான் மீண்டும் மேயராகவருவேன். அப்போது அதிமுக அரசு கொடுக்கும எந்தவித இடைஞ்சல்களையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற