அப்போ "உதயசூரியன்"... இப்போ "கை"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த சட்டசபைத் தேர்தலில் "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிட்ட ப. சிதம்பரம், தற்போது "கை" சின்னத்தில்போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் ஜனநயாகபேரவை கட்சி, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னமான "கை" சின்னத்தில்போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில்திமுக, அதிமுக கூட்டணி தவிர காங்கிரஸ் கட்சி தலைமையில் 10 கட்சிகளைக் கொண்ட 3வது கூட்டணியும்உருவாகியுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற இயக்கத்தைதொடங்கி, சமீபத்தில் காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்று அரசியல் கட்சியாக மாறிய கட்சியும் இந்தகூட்டணியில் இணைந்துள்ளது.

இந்த கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்கூறுகையில்,

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 3வது அணியில் இணைந்து போட்டியிடுகிறோம்.

காங்கிரஸ் கட்சியின் சின்னமான "கை" சின்னத்திலேயே எங்கள் கட்சியும் போட்டியிடும். ஆனால் இதுதற்காலிகமானதுதான் என்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சியாக இல்லாமல் இருந்த தமிழ் மாநில ஜனநாயக பேரவை, திமுககூட்டணியில் இணைந்து போட்டியிட்டபோது, திமுக சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற