மார்க்சிஸ்ட் கட்சியினரை மடக்க மேலிடத்துடன் ஜெ. பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணியில் இருந்து விலகாமல் இருக்க, அக்கட்சியின் மேலிடத்தலைவர்களுடன் ஜெயலலிதா பேசி வருகிறார்.

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் இன்று 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சி தவிர மற்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. மார்க்சிஸ்ட்கட்சி மட்டும், கூடுதல் இடங்களையும், திருப்பூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளையும் கேட்டு முரண்டுபிடித்து வருகிறது.

இதோபோல்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முரண்டு பிடித்தனர். அப்போதுஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கட்சியின் மேலிடத் தலைவர்களான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றவர்களைத் தொடர்புகொண்டு பேசினார். அவர்கள் சொன்னதும் தமிழகத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இப்போதும் அதேபோல பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், ஜெயலலிதா பழைய யுக்தியைக் கடைப்பிடிக்கமுடிவெடுத்து மீண்டும் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

இந்த முறையும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மசிவார்களா என்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் தெரியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற