பாக். எல்லையில் ஆப்கானிஸ்தான் ஏவுகணைகள் குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் எல்லை அருகே ஏவுகணைகளை தலிபான் ராணுவம் குவிக்க ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தான் வழியாகத் தான் அமெரிக்க விமானங்கள் தனது நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் என ஆப்கானிஸ்தான்ராணுவம் நம்புகிறது. இதையடுத்து பாகிஸ்தானை ஒட்டிய தனது எல்லை முழுவதும் தலிபான் வீரர்களை ராணுவம்நிறுத்தியுள்ளது.

ஏவுகணைகள், விமானங்களைத் தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் ஆகியவையும் இந்த எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றன.

அதே போல தலிபான்களின் தலைமையகமான காண்டஹாரை அமெரிக்காவிடமிருந்து காப்பாற்ற அரேபிய நாடுகளைச் சேர்ந்தசிறப்புப் பயிற்சி பெற்ற தற்கொலைப் படையினரை தலிபான் நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானை நோக்கி ஆப்கானிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பாகிஸ்தான் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள தனது விமானப் படைத் தளங்களில் இருந்து எல்லா போர் விமானங்களையும் பாகிஸ்தான்அப்புறப்படுத்திவிட்டது. இந்த விமான நிலையங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குவேட்டா விமானப் படைத் தளத்தை அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கும் எனத்தெரிகிறது. இங்கிருந்து தான் அமெரிக்க விமானங்கள் ஆபகானிஸ்தானுக்குள் சென்று தாக்க உள்ளன.

ஒமான் நாட்டைச் சுற்றி வளைகுடா பகுதியில் சுமார் 41 பெரிய போர்க் கப்பல்களை அமெரிக்காவும் இங்கிலாந்தும்குவித்துள்ளன. மேலும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் அரபிக் கடலை நோக்கி விரைந்து கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற