பாமகவின் கிராம ஸ்டண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தனது செல்வாக்கைநிலைநாட்டும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இப்போது உள்ளாட்சித் தேர்தலில்திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. பாமக தவிர திமுக கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சி பாரதீய ஜனதாக் கட்சி.

திமுக கூட்டணியில் திகவைத் தவிர அதிமுக இடங்களில் போட்டியிடும் கட்சி பாமகதான். திமுக 775 இடங்களிலும், பாட்டாளிமக்கள் கட்சி 163 இடங்களிலும், பாரதீய ஜனதாக் கட்சி 130 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள இடங்களில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டாலும் அதில் பெரும்பாலானவை கிராமப்புறங்களான பேரூராட்சி,ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில்தான். சேலம் மாநகராட்சி தவிர 15 நகராட்சிகள், 80 பேரூராட்சிகள், 67 ஊராட்சி ஒன்றியங்களில்பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

அதேசமயம், பாரதீய ஜனதாக் கட்சி 20 நகராட்சித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடுகிறது. 79 பேரூராட்சி தலைவர்பதவிகளுக்கும், 30 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கும் அது போட்டியிடுகிறது.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் தனது செல்வாக்கு அதிகம் என்பதை உணர்ந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிஅதற்கேற்றவாறு அதிக பட்ச அளவாக ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சிஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் திமுக 283 இடங்களிலும், பாமக 67 இடங்களிலும், பா.ஜக 30 இடங்களிலும்போட்டியிடுகின்றன.

கிராமப்புறங்களில் தனது காலை வலுவாக ஊன்றி விட்டால், அடுத்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் அதிக அளவில் தொகுதிகளை பெற்று விடலாம் என்ற கணிப்பில்தான் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில்அதிக அளவில் பாமக போட்டயிடுவதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற