செய்யாற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஆரணியில் ஓடும் செய்யாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் பலியானார்கள்.

ஆரணி அருகே பெரிய கொழப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிரகோரி மகன் மார்ட்டின் மற்றும், மகள்சித்ரா. இவர்களில் மார்ட்டின் 7ம் வகுப்பும், சித்ரா 6ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்தவிவாசாயி சவுல் மகள் வாணிஸ்ரீ, 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் 3 பேரும் தங்கள் நண்பர்கள் சிலருடன் செய்யாற்றில் கடந்த சில நாட்களாக பெருக்கெடுத்து ஓடும்வெள்ளத்தை வேடிக்கை பார்க்க ஆற்றுக்கு வந்தனர். பிறகு ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தனர்.

அப்போது திடீரென்று சித்ரா, ஆற்றில் உள்ள ஒரு புதைகுழியில் மாட்டிக்கொண்டு கத்தினாள். உடனே அவளைக்காப்பாற்றச் சென்ற மார்ட்டினும், வாணிஸ்ரீயும் அதே புதைகுழியில் மாட்டிக் கொண்டனர்.

இதைக் கண்ட மற்ற சிறுவர்கள் அலறிக்கொண்டு ஓடிச்சென்று ஆட்களைக் கூட்டி வந்தனர். 3 மணி நேரபோராட்டத்திற்கு பிறகு அந்த 3 பேரையும் பிணமாக பொதுமக்கள் மீட்டனர்.

இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற