பின் லேடன் ஒளிந்திருக்கும் இடம் தெரிந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஒசாமா பின் லேடன் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் ஆப்கானிஸ்தானின் பமீர் மலைப் பகுதியில் திடீர் தாக்குதல்நடத்தி, அவரைப் பிடிக்க அமெரிக்க கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ளனர்.

2,500க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய தன் ஆதரவாளர்கள் பாதுகாப்புடன், பமீர் மலைப் பகுதிகளில் பின் லேடன்பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 200 பேர் அவர் கூடவே இருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரங்கள்கூறுகின்றன.

சாட்டிலைட்டுளைக் கொண்டு பமீர் மலைப் பகுதியை சல்லடை போட்டுத் துருவிய அமெரிக்கா பின்லேடன் அங்குபதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதுகிறது.

அமெரிக்காவின் உளவு அமைப்பும் இந்தத் தகவலை உறுதி செய்யவே, பமீர் மலைப் பகுதியில் பெரும் தாக்குதலைநடத்த அமெரிக்க கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ளனர்.

தஜிகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சந்திக்கும் இடத்தில் இந்த மலைப் பகுதி அமைந்துள்ளதால்,பின் லேடன் இந்த நாடுகளுக்கு எளிதில் தப்பித்து விட வாய்ப்பளிக்காமல், மிகுந்த எச்சரிக்கையுடன் அமெரிக்ககமாண்டோக்கள் தாக்குதல் நடத்த உள்ளனர்.

இம்மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் வருடக் கணக்கில் தங்கி உயிர் வாழ முடியுமாம். அந்த அளவுக்குஇது வளமான பகுதியாகக் கருதப்படுகிறது.

1980களில் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் தாக்குதல் நடத்தியபோது, இந்த மலைப் பகுதிகளில்இருந்துதான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைைகளை ரஷ்யா பயன்படுத்தியது. எனவே இந்த மலைப்பகுதிகளில் ரஷ்யாவுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற