இளங்கோவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்- கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மூன்றாவது அணி அமைத்துள்ள இளங்கோவன், சிதம்பரம் போன்றவர்கள் முன்னாள் முதல்வர்களை எதிர்த்துப்பிரச்சாரம் செய்வோம் என்று அறிவித்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கருணாநிதி கூறினார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடைபெறவிருக்கும உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள்முதல்வர்களின் பழிவாங்கும் போக்கு, சுயநலம் போன்றவற்றை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வோம் என்றுகூறினார்.

இதற்கு கருணாநிதி பதிலளித்துப் பேசுகையில் கூறியதாவது,

காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் முன்னாள் முதல்வர்கள் என்று கூறியது, பிரகாசம் காலத்திலிருந்தா என்பதைஅவர் விளக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் என்ற முறையில் நானும் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள்கூறிவருகிறார்கள்.

இந்த அணியில் இணைந்துள்ளதால் இளங்கோவனுடன் சேர்ந்து, சிதம்பரமும் என்னை விமர்சிக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நான் இளங்கோவனின் தாத்தா பெரியார், அவரது தந்தை சம்பத் ஆகியோருடன் அரசியல் செய்தவன். மேலும்இளங்கோவன் வாலிபர், நான் வயதானவன். எனவே இவர் சொல்வதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற