போதையில் லாரியை ஒட்டிய கிளீனரால் சிறுமி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே ஒரு திருமண கோஷ்டியை ஏற்றிக் கொண்டு குடிபோதையில் லாரியை ஓட்டிய கிளீனரால் ஒருசிறுமி பலியானார்.

மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் கிரமாத்தைச் சேர்ந்த அர்ச்சுணன், சரஸ்வதி ஆகிய இருவருக்கும கடந்தஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

மாப்பிள்ளையின் ஊரான சிந்தூருக்கு, திருமண கோஷ்டியினர் லாரியில் சென்றனர்.

பிறகு அங்கிருந்து ணீம"டும் தங்கள் ஊருக்குச் செல்ல தயாரானபோது, லாரி டிரைவரைக் காணவில்லை. உடனேஅருகிலிருந்த லாரி கிளீனரே லாரியை ஸ்டார்ட் செய்தார். கிளீனர் கிருஷ்ணமூர்த்தி நல்ல போதையில் இருந்தார்.

அப்போது கியர் போடத் தெரியாமல், ரிவர்ஸ் கியரை போட்டுவிட்டதால் லாரி அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குள்இறங்கி தொங்கியது. உடனே லாரியிலிருந்தவர்கள், அவசரஅவசரமாக கீழே குதிக்கு உயிர் தப்பினர்.

ஆனால், லாரியில் இருந்த ஒரு சிறுமி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள். அவர் நீரில் இறந்தாள்.

இச் சம்பவத்தில் மேலும் 19 பேர் காயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார்விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற