பிற ஜாதியினர் எதிர்ப்பு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அஞ்சும் தாழ்த்தப்பட்டோர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

உசிலம்பட்டி அருகே தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 3 கிராம பஞ்சாயத்துகளில் கடைசி நாளான நேற்றுவரை ஒரு வேட்பு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமங்கள் நாட்டாமங்கலம், பாப்பாபட்டி மற்றும கீரிப்பட்டி.

இந்த 3 கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் திங்கள்கிழமை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் கடைசி நாள் வரை 3 கிராமங்களிலும் ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

அந்தப் பகுதியில் உயர் ஜாதியினர் அதிகமாக இருப்பதால், அவர்களின் அடக்குமுறைக்குப் பயந்து யாரும்மனுதாக்கல் செய்ய வரவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், இந்த 3 கிராம பஞ்சாயத்துகளை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கியதைஎதிர்த்து மற்ற ஜாதியினர் அனைவரும் தேர்தலைப் புறக்கணித்தனர். தாழ்த்தப்பட்டோரையும் வாக்களிக்கஅனுமதிக்கவில்லை. வாக்களிக்கச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களை அரிவாள்களைக் காட்டி மிரட்டி ஓட்டு போடவிடாமல் திருப்பி அனுப்பினர் பிற ஜாதியின். இதனால், அந்தத் தேர்தலில் ஒருவர் கூட ஓட்டு போடவில்லை (ஓட்டுபோட முடியவில்லை!)

இந்த முறை நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடக் கூட யாரும் முன் வரவில்லைய

இதையடுத்து அரசு அதிகாரிகள் கொண்ட குழு 3 கிராமங்களுக்கும் சென்று மனுதாக்கல் செய்யுமாறு பல தலித்தலைவர்களையும் சந்தித்துக் கேட்டுக் கொண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்த கிராமங்களில் இம் முறை தேர்தலை எப்படியாவது நடத்த அரசு முயலவேண்டும் என்று கோரி சிலநாட்களுக்கு முன்பு விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் மதுரையில் சாலை மறியல்நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற