சின்னங்கள் ஒதுக்கீடு: கட்சிகளுக்கே முன்னுரிமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்யும்போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனதாக் கட்சி (ஏர் உழவன்), ஐக்கிய ஜனதாதளம் (அம்பு), புதிய தமிழகம், புதியநீதிக் கட்சி, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை(பொதுவான ஏதாவது சின்னம்) ஆகிய கட்சிகள் சின்னம் ஒதுக்கும்போது தங்களுக்கு முன்னுரிமை தரக் கோரி உயர்நீதிமன்றத்தில்தனித்தனியாக மனு செய்திருந்தன.

மனுக்களை நீதிபதி தினகரன் விசாரித்தார். பின்னர் அவர் தீர்ப்பளிக்கையில், ஜனதாக் கட்சி தற்போது அகில இந்திய கட்சி என்றஅந்தஸ்தை இழந்து விட்டது. எனவே அதற்கு ஏர் உழவன் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது.

பிற கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவை கேட்கும் சின்னத்தை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும்.சுயேச்சை வேட்பாளர்களை விட அரசியல் கட்சிளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற