டான்சி: ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞருக்கு உதவ சுவாமிக்கு அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதானவிசாரணையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அரசுத் தரப்புவழக்கறிஞருக்கு தேவையான உதவிகளை செய்யலாம் என்று நீதிபதி தினகர் இன்று(புதன்கிழமை) அனுமதி அளித்தார்.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக இருந்த போது டான்சி நிலத்தை குறைந்தவிலைக்கு வாங்கி அரசுக்கு ரூ. 3 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது கடந்ததிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

மேலும், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறை கேடாக அனுமதிவழங்கியதாகவும் ஜெயலலிதா மீது திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு முறையே 3ஆண்டுகாலம், 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா சென்னைஉயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த அப்பீல் மனு மீதானவிசாரணை தற்போது நீதிபதி தினகர் முன் நடந்து வருகிறது.

அப்பீல் மனு மீதான விசராணை கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. ஜெயலலிதாசார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலன் ஆஜராகி வாதாடிவருகிறார்.

இன்று (புதன்கிழமை) வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக தொடர்ந்துநடைபெற்றது.

வழக்கு விசாரணை தொடங்கிய திங்கள்கிழமை இந்த வழக்கில் தான் வாதாடவிரும்புவதாகவும், அதற்கு தனக்கு அனுமதி தரவேண்டும் என்று நீதிபதியிடம் மனுதாக்ல் செய்தார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி.

இந்த மனுவுக்கு ஜெயலலிதா வக்கீலும், அரசு வக்கீலும் எந்த விதமானஆட்சேபணையும் தெரிவிக்காத காரணத்தால் சுப்ரமணியம் சுவாமி அரசு வக்கீல்வெங்கடபதிக்கு தேவையான உதவிகளை செய்யலாம் என்று நீதிபதி தினகர்அனுமதிஅளித்து உத்தரவிட்டார்.

டான்சி விவகாரத்தையே வெளியில் கொண்டு வந்தவர் சுப்பிரமணியம் சுவாமி தான்என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற